#BREAKING: ரஷ்ய அரசு ஊடகம் விளம்பரம் செய்ய ஃபேஸ்புக் தடை!
உலக முழுவதும் ரஷ்ய அரசு ஊடகம் விளம்பரம் செய்து வருவாய் ஈட்ட தடை விதித்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.
உக்ரைன் மீது தொடர்ந்து மூன்றாவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உலக முழுவதும் ரஷ்ய அரசு ஊடகம் விளம்பரம் செய்து வருவாய் ஈட்ட தடை விதித்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். நாங்கள் தற்போது உலகில் எங்கிருந்தும் எங்கள் தளங்களில் விளம்பரங்களை வெளிப்படுத்துவதற்கோ அல்லது பணமாக்குவதற்கோ ரஷ்ய ஊடகத்துக்கு தடை விதிக்கிறோம் என்று ஃபேஸ்புக் பாதுகாப்புக் கொள்கைத் தலைவர் நதானியேல் க்ளீச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் உள்ள நிலைமையை ஃபேஸ்புக் நிறுவனம். உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், மக்களை பாதுகாக்க அவர்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளை பகிர்ந்து கொள்வதாகவும் கூறியுள்ளார். உக்ரைன் மீது நடத்தப்படும் ராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஒரு சிறப்பு செயல்பாட்டு மையத்தை நிறுவி உள்ளோம், அதற்கான நிபுணர்களையும் பணி அமர்த்தியுள்ளோம். அதுமட்டுமில்லாமல் உக்ரைனில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.