இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் காயம்.
இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 3 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயமடைந்துள்ள நிலையில், ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்திருந்தார். தனது ராஜினாமா கடிதத்தை அதிபருக்கு அனுப்பி வைத்திருந்தார்.
மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையிலும், இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கிறது. இந்த நிலையில், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் 3 பேர் காயமடைந்த நிலையில், இதில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார். இலங்கையில் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்து உள்ளதால், அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மக்களின் பாதுகாப்பிற்காகவே ராணுவத்தினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் தெரிவித்திருந்தார். ராணுவத்திற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…