#Breaking:பரபரப்பு…உக்ரைன் மீது போர் தொடுக்க உத்தரவிட்டார் – புடின்!
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் ஆர்வம் காட்டும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதை தடுக்க ரஷ்யா, அந்நாட்டின் மீது போர் தொடுக்க பலவேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில்,ரஷ்யா – உக்ரைன் இடையே நிலவும் போர் பதற்றத்தை குறைக்க அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகள் முயற்சி செய்து வரும் நிலையில், கிளர்ச்சிப்படை ஆக்கிரமித்த கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய 2 பிராந்தியங்ளை தனி சுதந்திர நாடாக ரஷ்ய அதிபர் புடின் இரு தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். கிளர்ச்சிப்படை ஆக்கிரமித்த பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதாக கூறி அங்கு ரஷ்ய ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது. இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தலாம் என கூறப்பட்டது.
உக்ரைன் நாட்டை தம் வசமப்படுத்த ரஷ்யா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு,ஊடுருவி வருகிறது. இதனால் பதற்றம் நீடித்து வருகிறது.இந்த சூழலில் உக்ரைனில் இருந்து தூதரக அதிகாரிகளை விரைவில் வெளியேற ரஷ்யா உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில்,உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவு பிறப்பித்துள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Russia’s Putin announces a ‘military operation’ in Ukraine, calls on Ukraine military to ‘lay down its arms’: AFP pic.twitter.com/jf9M3FU6ir
— ANI (@ANI) February 24, 2022
மேலும்,உக்ரைன் ராணுவம் தனது ஆயுதங்களை கீழே போட வேண்டும் என புடின் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.இதற்கிடையில்,உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த ரஷ்யாவுக்கு ஐநா அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.