#BREAKING: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் கைது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பிடிஐ தலைவருமான இம்ரான் கானை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற (IHC) வளாகத்தில் கைது செய்தது பாகிஸ்தான் சிறப்பு படை. கைது செய்யப்பட்ட இம்ரான் கானை விசாரணைக்காக சிறப்புப்படை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இம்ரான் கானை கைது செய்ய முயன்றபோது தடுக்க முயன்ற அவரது வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்த தாக்குதலில் வழக்கறிஞர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தை விமர்சித்து பேசிய விவகாரத்தில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்தபோது, அந்நாட்டு ராணுவத்தை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராகியபோது கைது செய்யப்பட்டார். கைது அடுத்து, பிடிஐ கட்சி, “நமது ஜனநாயகத்திற்கும், நாட்டிற்கும் கருப்பு நாள்” என்று ட்வீட் செய்துள்ளது.