இலங்கை அரசை கலைக்க 11 கூட்டணி கட்சிகள் அதிபரிடம் வலியுறுத்தல்.
இலங்கையில் அமைச்சரவை கலைத்துவிட்டு காபந்து அரசாங்கத்தை அமல்படுத்துமாறு அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 11 கூட்டணி கட்சிகள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடம் வலியுறுத்தியுள்ளனர். அதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, லங்கா சமசமாச கட்சிகள் மற்றும் இலங்கை கம்யூனிச கட்சி, தேசிய காங்கிரஸ், ஸ்ரீலங்கா மகாஜன கட்சி உள்ளிட்ட கட்சிகள் அதிபரிடம் இலங்கை அரசை கலைக்க வலியுறுத்தியுள்ளனர்.
அரசாங்கத்திற்கு ஆதரவு தரும் கட்சிகளை இணைத்து கொண்டு காபந்து அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். விலைவாசி உயர்வு, 13 நேர மின்வெட்டு உள்ளிட்ட பிரச்சனைகளால் கடும் இன்னல்களை இலங்கை மக்கள் சந்தித்து வரும் நிலையில், அரசாங்கத்தை கலைக்க வலியுறுத்தியுள்ளனர். பொருளாதார நெருக்கடியை தடுக்க இலங்கை அரசு தவறியதை கண்டித்து பொதுமக்கள் நேற்று போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…