#BREAKING : காவிரி நீர் விவகாரம் – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்

Supreme court of India

காவிரி நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர இருந்த நிலையில், முன்னதாக டெல்லியில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியுடன் தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தற்போது டெல்லி உச்சநீதிமன்றத்தில், காவிரி விவகாரத்தில் 113 பக்கங்களை கொண்ட விரிவான மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. காவிரி விவகாரத்தில் பிரதமருக்கும் முதல்வர் எழுதிய கடிதம், காவிரி மேலாண்மை கூட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் விவாதங்கள் உள்ளிட்ட விவரங்களும் இதில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில், ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை 53 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட்டிருக்க வேண்டும்; ஆனால், தற்போது வரை 15 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்திற்கு தர வேண்டிய 28.8 டிஎம்சி நீரை திறந்துவிட கோரபட்டுள்ளது. மேலும், காவிரியில் விநாடிக்கு 24000 கன அடி தண்ணீரை திறந்து விடக்கோரியும் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்