#BREAKING: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை ரத்து.!

குடியரசு தின விழாவில் பங்கேற்க இருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் வேகமாக பரவி வருவதால், இந்திய சுற்றுப் பயணத்தை ரத்து செய்துள்ளார். பிரிட்டனில் தினந்தோறும் 60,000 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகிறாரகள். இதனிடையே, இந்தியாவிலும் உருமாறிய கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது. மேலும், பிரிட்டனில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.