#BREAKING : பிரிட்டன் பிரதமர் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிப்பு..!
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்யாவிற்குள் நுழைய ரஷ்ய அரசு தடை விதித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். போரை நிறுத்துமாறு அறிவுறுத்தி வருகின்றனர். உக்ரைன் மீதான ரஷ்ய போருக்கு எதிராக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்துள்ளார்.
உக்ரைனுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வந்த நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடையையும் பிரிட்டன் விதித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்யாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.