#BREAKING: பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு – 50 பேர் காயம்…
பாகிஸ்தானின் பெஷாவர் நகர் மசூதி ஒன்றில் மதியம் வழிபாட்டு நேரத்தில் குண்டு வெடித்ததில் 50 பேர் காயம் என தகவல்.
பாகிஸ்தானின் பெஷாவர் போலீஸ் லைன்ஸ் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் மதியம் வழிபாட்டு நேரத்தில் குண்டு வெடித்ததில் 50 பேர் காயமடைந்துள்ளனர். அதாவது, மசூதியில் தொழுகையின் போது “தற்கொலை தாக்குதல் நடத்தியவர்” தன்னைத்தானே வெடிக்கச் செய்ததில் குறைந்தது 50 பேர் காயமடைந்ததாகவும், குண்டுவெடிப்பில் காயமடைந்த பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மசூதியின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை. அருகில் உள்ள மருத்துவமனைகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.