தமிழ் திரைப்பட கலை இயக்குனர் மிலன் , அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் பணியாற்றி வந்து இருந்தார். அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்த இந்த படபிடிப்பில் கலை இயக்குனர் மிலன் வேலை செய்து வந்துள்ளார்.
இவருக்கு தற்போது படப்பிடிப்பு வேலையின் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக சக ஊழியர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே கலை இயக்குனர் மிலன் உயிரிழந்துள்ளார்.
VidaaMuyarchi: நாங்க இங்க தான் இருக்கிறோம்! போட்டோவை வெளியிட்டு கன்ஃபார்ம் செய்த அஜித் – த்ரிஷா!
கலை இயக்குனர் மிலன் இதற்கு முன்னர் அஜித்தின் பில்லா, வீரம், வேதாளம், துணிவு போன்ற படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதே போல, வேலாயுதம், பத்து தல உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களுக்கும் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்தின் 63வது படமானது, பல மாதங்கள் கழித்து லைகா பட நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டு, பின்னர் கதை விவாதத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மாற்றப்பட்டு அதன் பின்னர், இயக்குனர் மகிழ் திருமேனி ஒப்பந்தமாகி, பின்னர் அஜித்தின் பைக் பயணம் எல்லாம் முடிந்து தற்போது படப்பிடிப்பு தொடங்கிய திரைப்படம் விடாமுயற்சி. இந்த சமயத்தில் இப்படி ஒரு மரண செய்தி அஜித் ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…