உக்ரைனின் போரிட்டு வரும் ரஷ்ய வீரர்கள் 4,300 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அமைச்சர் தகவல்.
உக்ரைன் மீது தொடர்ந்து நான்காவது நாளாக இடைவிடாத தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ரஷ்ய வீரர்கள் 4,300 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ஹன்னா மலயார் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் 146 டாங்கிகள் (பீரங்கிகள்), 27 போர் விமானங்கள் மற்றும் 26 ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் உக்ரைன் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது போர் தொடங்கிய 4 நாட்களிலேயே ரஷ்யாவிற்கு இது மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் உக்ரைன் ராணுவனத்தை பொறுத்தவரை 100க்கும் மேற்பட்ட வீரர்கள் மட்டுமே இறந்துள்ளார்கள் என்று இதுவரை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் , ரஷ்ய ராணுவம், உக்ரைன் நாட்டின் வீரர்கள் எத்தனை பேரை கொன்றுள்ளார்கள் என்று முழுமையான தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடப்படுகிறது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…