BREAKING :சுலைமானி இறுதி ஊர்வலத்தில் 35 பேர் உயிரிழப்பு.!
- அமெரிக்க நடத்திய ஆளில்லா விமானம் தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை இராணுவ தளபதி காசிம் சுலைமானி உயிரிழந்தார்.
- ஈரான் ராணுவ தளபதி சுலைமானி இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழப்பு எனத் தகவல்வெளியாகி உள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலையத்தின் அருகே அமெரிக்க நடத்திய ஆளில்லா விமானம் மூலம் தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை இராணுவ தளபதி காசிம் சுலைமானி மற்றும் ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் துணை தலைவர் அபு மகாதி உள்ளிட்ட 7 பேர் இறந்தனர்.
இந்த தாக்குதலால் ஈரானுக்கும்,அமெரிக்காவுக்கும் இடையே போா் ஏற்படும் அபாயம் உள்ளது.இந்நிலையில் சுலைமானின் உடல் அடக்கம் செய்ய அவரது சொந்த ஊரான கெர்மனுக்கு இன்று அதிகாலை விமானம் மூலம் சுலைமானின் உடல் கொண்டு செல்லப்பட்டது. கெர்மனில் நடந்த இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
عاجل: «التلفزيون الإيراني»:
● 35 قتيلا و48 مصابا في تدافع أثناء تشييع جنازة #قاسم_سليماني في كرمان. pic.twitter.com/7lwXptRoCG
— مفتش الكويت (@MOOFTSH) January 7, 2020
அப்போது கெர்மனின் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 35 பேர் உயிரிழந்ததாகவும், 48 பேர் காயமடைந்ததாகவும் உள்ளுர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. இவர்கள் அனைவருமே மூச்சு திணறி இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.