#Breaking:பதிலடி….5 ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்
விமான நிலையங்கள் மற்றும் ராணுவ நிலையங்களை குறிவைத்து ரஷ்ய தாக்குதல் நடத்தி வரும் நிலையில்,அதன் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம்தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.அந்த வகையில்,உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் ,கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸ்கை ரஷ்யா தாக்க தொடங்கியது.மேலும்,ஒடோசா , கார்கிவ், மைக்கோல் , மாரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷ்யா தாக்கி வருகிறது. இதற்கு அமெரிக்கா கண்டனங்கள் தெரிவித்து வருகின்றது.
இந்நிலையில்,விமான நிலையங்கள் மற்றும் ராணுவ நிலையங்களை குறிவைத்து ரஷ்ய தாக்குதல் நடத்தி வரும் நிலையில்,அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
லுஹான்ஸ்க் நகரில் 5 போர் விமானங்களுடன் ரஷ்யாவின் ஹெலிகாப்டரையும் வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
Ukraine military says five Russian planes and a Russian helicopter were shot down in Luhansk region: Reuters
— ANI (@ANI) February 24, 2022