உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு உக்ரைன் டோனட்ஸ்க் நகரில் ரஷ்ய படைகள் தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் ஆர்வம் காட்டும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதை தடுக்க ரஷ்யா, அந்நாட்டின் மீது போர் தொடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.
இதற்கிடையில்,ரஷ்யா – உக்ரைன் இடையே நிலவும் போர் பதற்றத்தை குறைக்க அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகள் முயற்சி செய்து வரும் நிலையில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவு பிறப்பித்துள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில்,உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு உக்ரைன் டோனட்ஸ்க் நகரில் ரஷ்ய படைகள் தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறிப்பாக,உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக தகவல்கள் வெளிவருகின்றன.இதற்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதற்கிடையில்,உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியுள்ளது.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…