#Breaking:உக்ரைன்:துப்பாக்கி சண்டையில் இந்திய மாணவர் காயம்? – மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் அறிவிப்பு!

உக்ரைன் மீது ரஷ்யா 9 வது நாளாக இன்று தாக்குதல் நடத்தி வருகிறது.அந்த வகையில்,ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே,ஆபரேசன் கங்கா திட்டத்தின் மூலம் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் அண்டை நாடுகள் வழியாக தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.
இந்நிலையில்,உக்ரைன் லிவிவ் நகரில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் காரில் சென்ற இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங் என்பவர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது என மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.
மேலும்,படுகாயமடைந்த தன்னை ஆம்புலன்ஸ் மூலம் கீவ் நகர மருத்துவமனையில் அனுமதித்ததாக இளைஞர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக,கீவ் நகரில் சிகிச்சை பெரும் ஹர்ஜோத் சிங் தன்னை இந்தியா அழைத்து செல்ல உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே,உக்ரைனில் நடைபெற்று வரும் தாக்குதலில் கர்நாடகா மாணவர் நவீன் என்பவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.