பிரேசிலில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,50,000 தாண்டியது.!
பிரேசிலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது.
மேலும், இன்று 290 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 150,488 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 12,345 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரேசிலின் கொரோனா உயிரிழப்பு கடந்த சனிக்கிழமை 1,50,000 ஐத் தாண்டியது. இது, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிக அதிகமான இறப்பு எண்ணிக்கையைக் கொண்ட நாடாக பிரேசில் உள்ளது.
பிரேசிலின் அதிக மக்கள் தொகை கொண்ட சாவோ பாலோ மாநிலலத்தில் 1,037,660 பேருக்கு கொரோனா பாதிப்பு மற்றும் 37,256 உயிரிழப்புகளை கொண்டுள்ளது.