வீடியோ கான்பிரன்சிங்கில் சட்டை போட மறந்த நீதிபதி
கொரோனா வைரஸ் சீனாவில் தான் முதலில் பரவியது.இதன்தொடர்ச்சியாக உலகில் உள்ள பல நாடுகளில் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் அலுவலக பணிகள் வீட்டிலிருந்தபடியே மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரேசிலில் நீதிபதி ஒருவர் வீடியோ கான்பிரன்சிங்கில் சட்டை இல்லாமல் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதாவது பிரேசிலில் நீதிபதிகள் Zoom செயலி மூலமாக வழக்கு தொடர்பாக ஆலோசித்து வந்தனர்.அந்த சமயத்தில் Zoom செயலி மூலம் வீடியோ கான்பிரன்சிங் நீதிபதி அண்டோனியோ மேல் சட்டை இல்லாமல் காட்சியளித்தார்.இதனால் மீதமிருந்த 4 நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர்.இதன் பின் சட்டை இல்லாததை உணர்ந்த அவர் வழக்கமான தனது உடையுடன் வந்தார்.
Zoom App மூலமாக தகவல் திருப்படுவதை தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அதனை படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.