அமேசான் காடுகளில் தீ வைப்பதை பிரேசில் அரசாங்கம் தடை செய்துள்ளது!
அமேசான் காடுகளில் தீ வைப்பதை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக பிரேசில் அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய மூலிகை காடுகளில் ஒன்றான அமேசான் மழைக்காடுகள் தென் அமெரிக்காவின் பிரேசில் பகுதியில் உள்ளது. இங்கு கடந்த வருடம் ஏற்பட்ட தீ விபத்தால் பல்லாயிரக்கணக்கான சிறு மற்றும் பெரிய உயிரினங்கள் உயிரிழந்ததை அடுத்து அதற்கான நடவடிக்கையாக கடந்த வருடமே பிரேசில் அரசாங்கம் இனி அமேசான் காடுகளில் தீ வைப்பதற்கு தடை என அறிவித்தது.
இதனை தொடர்ந்து தற்பொழுதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தை கருத்தித்தில் கொண்டு அதே போல அமேசான் காடுகளில் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரேசில் உலகின் மிக பெரிய காடுகளில் ஒன்றான அமேசான் காட்டிற்கு பாதுகாப்பான இடம் இல்லை என்ற பேச்சு மக்கள் மத்தியில் எழுந்ததால் இந்த நடவடிக்கை ஏற்பட்டுள்ளது.