இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பிரேசில்…! ஒரேநாளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி…!
உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில், பிரேசில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், தற்போது தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால், அதன் தீவிரம் சற்று தனி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பல இடங்களில் இந்த வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளது.
இந்நிலையில், பிரேசிலில் தற்போது பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 79 ஆயிரத்து 111 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 13 லட்சத்து 63 ஆயிரத்து 380 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸால் ஒரே நாளில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 75 ஆயிரத்து 105 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில், பிரேசில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.