முககவசத்தை அலட்சியப்படுத்திய பிரேசில் அதிபருக்கு கொரோனா உறுதி.!

பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு தற்போது கொரோனா உறுதியாகியுள்ளது தெரியவந்துள்ளது. இன்று மதியம் உணவு இடைவெளி நேரத்தில் உறுதியான தகவல்கள் வெளியிடப்பட்டன.
65 வயதான போல்சனாரோ இதுவரை கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக கடைபிடித்ததில்லை என குற்றசாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. மக்கள் கூடும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார், முகமூடிகளை சரிவர அணிந்ததில்லை என பல்வேறு விமர்சனங்கள் இவர் மீது வைக்கப்பட்டு வந்தன. தற்போது அதனால் தான் இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என ஒருசாரார் கூறிவருகின்றனர்.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரேசில் 2ஆம் இடத்தில் உள்ளது. இதுவரை 1.6 மில்லியன் மக்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.