பிரேசில் அணை உடைப்பு….58 பேர் பலி , 300க்கும் மேற்பட்டோர் மாயம்…!!
பிரேசில் நாட்டில் உள்ள அணை உடைந்ததில் 58 பேர் பலியாகி 350 பேர் காணாமல் போயுள்ளனர்.
பிரேசில் நாட்டில் உள்ள புருமடின்ஹோ இடத்தில் இரும்பு தாது எடுக்கும் சுரங்கம் இருக்கின்றது. இதன் அருகில் பழமை வாய்ந்த அணை உள்ளது.இந்நிலையில் சம்பவத்தன்று அணையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.
அப்போது அணையில் உடைப்பு பெரிதாகி அணையின் ஒருபகுதி உடைந்து தண்ணீர் சுரங்கம் முழுவதும் சூழ்ந்து கொண்டது.மேலும் அணையில் இருந்து வெளியேறிய நீர் அருகில் உள்ள விலை நிலங்கள் , பகுதிகளுக்கு சென்றது.
இதையடுத்து இந்த வெள்ளத்தால் பலரை காணவில்லை , இறந்ந்திருக்கலாம் என மீட்புபடை வீரர்கள் துரிதமாக செயல்பட்டனர்.இந்நிலையில் தற்போது வரை இந்த வெள்ளத்தில் உயிரிழந்ததாக கூறி 58 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.மேலும் 300க்கு மேற்பட்டோரை காணவில்லை என்று கூறப்படுகின்றது.மீட்ப்பு பணியினர் துடைத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.