அமேசான் காட்டில் வசிக்கும் பெண்ணுக்கு கொரோனா உறுதி

முதல் முறையாக அமேசான் காட்டில் வசிக்கும் பெண் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் கொரோனாவால் 50000 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அமேசான் காட்டில் உள்ள மக்கள் வெளி உலகிற்கு அதிகம் தொடர்பு இல்லாதவர்கள்.அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை அவர்களே பூர்த்தி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரேசிலில் உள்ள அமேசான் காட்டில் பழங்குடியின பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 20 வயது நிரம்பிய அந்த பெண்மணி சுகாதாரப்பணியாளாராக செயல்பட்டு வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் காடுகளில் வாழும் மற்றவர்களும் அச்சத்தில் உள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் அவரது குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.