எல்லைக்கு அருகில் சீனாவின் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உலவுவதை கண்டிக்கும் வகையிலும், பதிலடி கொடுக்கின்ற வகையிலும் லடாக் எல்லைக்கு இந்திய ஏவுகணைகள் அனுப்பப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பிரச்னை தற்போது தீவிரமடைந்து உள்ளது. கடந்த, ஆறு வாரங்களுக்கும் மேல் இரு தரப்பு ராணுவமும் எல்லையில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் தங்களது படைகளை நிறுத்தி வருகிறது.
இந்நிலையில் பலகட்டமாக நடந்த பேச்சுவார்த்தை முடிவில் இரு நாட்டு படைகளை விலக்கிக் கொள்ள, இரு தரப்பு பேச்சிலும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் எல்லையில் தொடர்ந்து படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக, சீன எல்லையில், போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து கேட்கையில் ரோந்துப் பணியில் ஈடுபடுவதாக, சீனா கூறிகிறது.இதற்கிடையே, சீனாவை எப்போதும் இந்தியா நம்பத் தயாரக இல்லை, மேலும் ஏதாவது விஷமத்தனமாக சீனா செயல்பட்டால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தரையில் இருந்து ஆகாயத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடிய ஏவுகணைகள், லடாக் எல்லைக்கு அனுப்பப்பட்டு உள்ளன.
நம் விமானப் படை, ராணுவத்தின் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் எல்லையில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இத்துடன், எல்லையில், அதிதீவிர கண்காணிப்பும் தொடர்கிறது.நம் வான் எல்லைக்குள் அத்துமீறி சீனா நுழைய முயன்றால், அதை உடனடியாக கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில் அண்மையில் ரஷ்யா சென்ற, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்ய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையின் படி செய்துக்கொண்ட ஒப்பந்தத்தின்படி, அதி நவீன, ‘எஸ் – 400’ ரக ஏவுகணைகளை மிக விரைவில் அனுப்புவதாக, ரஷ்யா உறுதி அளித்துள்ளது. இனி அதுவும் வந்து இறங்கினால் அதையும் எல்லையில் பயன்படுத்த இந்திய ராணுவம் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…
சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்…
சென்னை : நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…
சென்னை : திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை , கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று, பாகன் உதயகுமார் மற்றும்…