எல்லையில்!சீனா போர் விமானங்கள்- புயலென புறப்பட்டது பிரமோஸ்!

Default Image

எல்லைக்கு அருகில் சீனாவின் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உலவுவதை கண்டிக்கும் வகையிலும், பதிலடி கொடுக்கின்ற  வகையிலும்  லடாக் எல்லைக்கு இந்திய ஏவுகணைகள் அனுப்பப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பிரச்னை தற்போது தீவிரமடைந்து உள்ளது. கடந்த, ஆறு வாரங்களுக்கும் மேல் இரு தரப்பு ராணுவமும் எல்லையில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் தங்களது படைகளை நிறுத்தி வருகிறது.

இந்நிலையில்  பலகட்டமாக நடந்த பேச்சுவார்த்தை முடிவில் இரு நாட்டு படைகளை விலக்கிக் கொள்ள, இரு தரப்பு பேச்சிலும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் எல்லையில் தொடர்ந்து படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக, சீன எல்லையில், போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து கேட்கையில் ரோந்துப் பணியில் ஈடுபடுவதாக, சீனா கூறிகிறது.இதற்கிடையே, சீனாவை எப்போதும்  இந்தியா நம்பத் தயாரக இல்லை, மேலும் ஏதாவது விஷமத்தனமாக சீனா செயல்பட்டால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தரையில் இருந்து ஆகாயத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடிய ஏவுகணைகள், லடாக் எல்லைக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

நம் விமானப் படை, ராணுவத்தின் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் எல்லையில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இத்துடன், எல்லையில், அதிதீவிர கண்காணிப்பும் தொடர்கிறது.நம் வான் எல்லைக்குள் அத்துமீறி சீனா நுழைய முயன்றால், அதை உடனடியாக கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க  அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில் அண்மையில் ரஷ்யா சென்ற, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்  ரஷ்ய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையின் படி செய்துக்கொண்ட ஒப்பந்தத்தின்படி, அதி நவீன, ‘எஸ் – 400’ ரக ஏவுகணைகளை மிக விரைவில் அனுப்புவதாக, ரஷ்யா உறுதி அளித்துள்ளது. இனி அதுவும் வந்து இறங்கினால் அதையும் எல்லையில் பயன்படுத்த  இந்திய ராணுவம் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்