பிபி மாத்திரைகள் பெருங்குடல் புற்றுநோய் குறைக்கிறது.? ஆய்வில் தகவல்.!

Published by
murugan

உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிக்க பொதுவாக பரிந்துரைக்கப்படும் மருந்து பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கலாம் என்று  ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

ACE(angiotensin converting enzyme ) மற்றும் ARB  (angiotensin II receptor blocker) ஆகிய மருந்துகள் இதய செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய நோய் போன்றவற்றிக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த மருந்துகள் ஆஞ்சியோடென்சின் என்ற வேதிப்பொருளைத் தடுக்கின்றன. ஆஞ்சியோடென்சின் தமனிகள் குறுகுவதற்கு காரணமாக உள்ளது.  தமனிகள் குறுகுவதால் உயர் இரத்த அழுத்தம்  ஏற்படுகிறது.

கடந்த 2005 முதல் 2013 வரை ஹாங்காங்கில் 187,897 பெரியவர்களின் சுகாதார பதிவுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். தமனிகள் குறுகுவதற்கு காரணமான ஆஞ்சியோடென்சின் என்ற வேதிப்பொருளைத் தடுக்க ACE(angiotensin converting enzyme ) மற்றும்  ARB  (angiotensin II receptor blocker) என்ற மருந்துகளை எடுத்துக் கொண்டவர்களுக்கு, அடுத்த மூன்று ஆண்டுகளில் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவது  22% குறைவாக உள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த மருந்துகள் முழுமையாக பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்காது, ஆனால் பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்க பயன்படுகிறது என ஆய்வாளர்கள் கூறினர். பெருங்குடல் புற்றுநோய் இதனை ஆங்கிலத்தில் கோலன் கேன்சர் என்று கூறுவார்கள். இது உலகளவில் மூன்றாவது பொதுவான புற்றுநோயாகும்.மேலும், உலகளவில் புற்றுநோய் இறப்புக்கு இரண்டாவது முக்கிய காரணமாகும்.

Published by
murugan

Recent Posts

முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் காலமானார்.!

முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் காலமானார்.!

கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…

26 mins ago

“அமரன்” படக்குழுவிற்கு வரும் அச்சுறுத்தல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் – தமிழ்நாடு பாஜக!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…

3 hours ago

அரசி எலிசபெத்தின் 77 ஆண்டுகள் பழமையான திருமண கேக்..பிரமாண்ட விலைக்கு ஏலம்!

ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…

3 hours ago

கங்குவா படத்தை வெளியிடத் தடையில்லை – சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…

4 hours ago

விடுமுறை இல்ல!! நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும்.!

சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…

4 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (09/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…

5 hours ago