ரஷ்யாவில் பர்கருக்காக 2 லட்சம் செலவு செய்த காதலன்..!
ரஷ்யாவை சேர்ந்த விக்டர் மார்டினோவ் என்ற பணக்காரர் சும்மா 49 பவுண்டுகள் செலவாகும் பர்கர் மற்றும் மில்க் ஷேக் போன்ற உணவுகள் சாப்பிட 2000 டாலர் செலவழித்தார். ஏன் இந்த செலவு.. உங்களுக்குத் தெரியுமா ..? விக்டர் மார்டினோவ் மாஸ்கோவில் உள்ள ஒரு ஹெலிகாப்டர்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.
அவர் சமீபத்தில் தனது காதலியுடன் ஒரு மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிப்பதற்காக கிரிமியாவிற்கு அருகிலுள்ள ஒரு தீவுக்குச் சென்றார். இருப்பினும், அவர்கள் சென்ற அந்த தீவில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவு இயற்கை உணவு, அந்த உணவானது விக்டர் மற்றும் அவரது காதலிக்குப் பிடிக்கவில்லை.
உடனே விக்டர் தான் தங்கி இருந்த இடத்தில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உணவகத்திற்கு செல்ல ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்து காதலியுடன் சென்றுள்ளார். விக்டர் இந்த பயணத்திற்கு மட்டும் 2,000 டாலர் செலுத்தினார்.
இதுகுறித்து விக்டர் கூறுகையில், “நானும் என் காதலியும் இயற்கை உணவு சாப்பிட விரும்பவில்லை, எனவே நாங்கள் பர்கர்களை சாப்பிட மெக்டொனால்டுக்குச் சென்றோம்” என்று விக்டர் மார்டினோவ் கூறினார். மெக்டொனால்டு உணவகத்தில் அவர்கள் ஆர்டர் செய்த பர்கரின் மொத்த விலை 49 பவுண்டுகள் (தோராயமாக 4,800 ரூபாய்). ஆனால் ஹெலிகாப்டரின் விலை சுமார் 2,000 பவுண்டுகள் (2 லட்சம் ரூபாய்) என்பது குறிப்பிடத்தக்கது.