அருண் விஜய் நடிக்கவுள்ள பாக்ஸர் படத்தினை தயாரிக்கும் மதியழகன் இந்த படத்தின் மூலம் நடிகராக களமிறங்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அருண் விஜய் நடிப்பில் அறிமுக இயக்குனரான விவேக் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘பாக்ஸர்’. இந்த படத்தை எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் பேனரின் கீழ் மதியழகன் தயாரிக்கிறார். டி. இமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரித்திகாசிங் நடிக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்காக அருண் விஜய் வெளிநாடுகளில் சென்று தற்காப்பு கலைகளை கற்றுக் கொண்டார். இதன் படப்பிடிப்பு திட்டமிட்டப்படி தொடங்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று வித்தியாசமான லுக்கில் பாக்ஸராக நடிக்கும் அருண்விஜய்க்கு தற்போது வில்லனாக நடிப்பது யார் என்ற செய்தியை தயாரிப்பாளரே வெளிப்படுத்தியுள்ளார். ஆம், பாக்ஸர் படத்தின் தயாரிப்பாளர் தான் அருண்விஜய்க்கு வில்லனாக நடிப்பதாக கூறியுள்ளார். அருண்விஜய்க்கு மேனேஜராக நடித்துள்ளதாக வும், தனது பேச்சை கேட்காமல் அவர் முடிவெடுக்கும் பட்சத்தில் அவருக்கு தான் வில்லனாக மாறுவதாகவும் கதையை போட்டுடைத்துள்ளார். மேலும் மதியழகன் நடன இயக்குனர் பாபி ஆண்டனி இயக்கும் படத்தில் ஹீரோவாக நடித்து வரவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தினை குறித்த முக்கிய அறிவிப்பை இன்று மாலை 5மணிக்கு ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஹேமா ருக்மணி வெளியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் வில்லனாக மதியழகன் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தற்போது அந்த புகைப்படம் செம்ம வைரலாகி வருகிறது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…