சென்னை மக்கள் வெள்ளத்தால் தத்தளித்து வரும் நிலையில், பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்காக செய்துகொடுத்து வருகிறார்கள். மக்களை போலவே சினிமா பிரபலங்கள் பலரும் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறார்கள். குறிப்பாக விஸ்ணு விஷால் மற்றும் அமீர்கான் இருவரும் தங்களுடைய வீட்டிற்குள் தண்ணீர் புகுந்த நிலையில் தங்களுக்கு உதவி வேண்டும் என்று விஷ்ணு விஷால் கேட்டிருந்தார்.
இதனையடுத்து, தீயணைப்புத் துறையினர் விரைந்து அதிரடியான நடவடிக்கையை எடுத்து. இந்த உதவிய செய்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு விஷ்ணு விஷால் தன்னுடைய நன்றியும் தெரிவித்துக்கொண்டார். அதனை தொடர்ந்து இவர்களுக்கு உதவி தேவை என்ற தகவலை அறிந்த அஜித் உதவ ஏற்பாடு செய்ததாகவும் தெரியவந்தது.
வீட்டை சூழ்ந்த வெள்ளம்…அமீர் கான் – விஷ்ணு விஷால் பத்திரமாக மீட்பு.!
இதை பற்றி நடிகர் விஷ்ணு விஷால் “ஒரு பொதுவான நண்பர் மூலம் எங்கள் நிலைமையை அறிந்த பிறகு, அஜித் சார் எங்களைப் பார்க்க வந்து எங்கள் வில்லாவில் உள்ள சக உறுப்பினர்களுக்கான பயண ஏற்பாடுகள் செய்ய உதவினார்” என்று கூறியிருந்தார். அமீர், அஜித், விஷ்ணு விஷால் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வைரலானது.
பிரபலங்களின் குரலை கேட்டு உதவி செய்த அஜித் ஏழை மக்களுக்கும் உதவி செய்யலாமே என்பது போல போஸ் வெங்கட் அஜித் செய்த உதவி பற்றி விமர்சித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் “வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாடு.. இங்கிருக்கும் அத்தனை வட நாட்டவரையும் தமிழகம் காக்கும்.
(உங்களுக்குள் நல்ல இணைப்பு உண்டு).. ஆனால் உங்களை விரும்பும்.. டிக்கெட் எடுத்து உங்களை பார்க்கும் ஏழை குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை.,,( ஒரு போட் அவனுக்கும் விட்டிருக்களாம்)” என போஸ் வெங்கட் கூறியுள்ளார்.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…