கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார் பிரிட்டன் பிரதமர்.!
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 17 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொரோனா வைரஸால் சில முக்கிய தலைவர்களும் பாதிக்கப்பட்டனர். இதில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இருப்பது 2 வாரங்களுக்கு முன் தெரியவந்தது. இதையெடுத்து போரிஸ் ஜான்சன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு அரசு பணிகளையும் கவனித்து வந்தார்.
ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா தாக்கம் அதிகரித்ததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி லண்டன் செயின்ட் தாமஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மறுநாள் உடல்நிலை கொஞ்சம் மோசமானதால் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார்.
இதையெடுத்து மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் உடல் நிலை சற்று குணமடைந்து போரிஸ் ஜான்சன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு இருந்தார். இந்நிலையில், தற்போது பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். சிகிச்சை முடிந்தாலும், அலுவல் பணிகளை தொடர முடியாது என மருத்துவர்கள் தகவல்.