சர்க்கரை நோயை குணப்படுத்தும் ஆவாரம் பூவின் வியக்க வைக்கும் அற்புத குணநலன்கள்!!!!!!!
ஆவாரம்பூவின் பயன்கள் :
ஆவாரம்பூ பொதுவாக ஜனவரி ,பெப்ரவரி ,மார்ச் ஆகிய மாதங்களில் அதிகமாக கிடைக்கும் .இதனை ஆங்கிலத்தில் “கோல்டன் சவர் ட்ரீ” என்று அழைப்பர் .மேலும் இதனை தமிழில் அவாரை என்றும் அழைப்பார்கள். இது சர்க்கரை நோயை குணப்படுத்தும் மருத்துவ குணம் வாய்ந்தது.இந்த ஆவாரம்பூ கிட்னி செயல்பாட்டைத்தூண்டும் அற்புதகுணம் வாய்ந்தது.மேலும் இது நீர் கடுப்பை சரிசெய்கிறது சிறுநீரகத்தில் ஏற்படும் எரிச்சலை தடுக்கிறது.மேலும் இது நரம்பு தளர்ச்சியையும் குணப்படுத்தும்.
சர்க்கரை நோயாளிகள் ஆவாரம் பூவை வெயிலில் நன்கு காய வைத்து அரைத்து பொடியாக்கி நீர் சேர்த்து கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் இரத்தத்தில் சர்க்கரை சீராக இருக்கும் .சர்க்கரை நோயால் ஏற்படும் நரம்பு தளர்ச்சி குணமாகும்.
ஆவாரம் பூவை வெயிலில் நன்கு காய வைத்து அரைத்து பொடியாக்கி தயிர் அல்லது மோர் சேர்த்து முகத்தில் பூசி அரை மணி கழித்து கழுவி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும் .மேலும் ஆவாரம்இலை மற்றும் பாசிப்பருப்பு, பூலாங்கிழங்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அரைத்து பூசி குளித்து வந்தால் உடலில் உள்ள அரிப்புகள் நீங்கும்.