தனுஷ் தயாரிக்க இருந்த பாலிவுட் திரைப்படத்தை கைப்பற்றிய போனிகபூர்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தல அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர், அடுத்ததாக மீண்டும் வினோத் – தல அஜித் நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்தை அடுத்து மீண்டும் தமிழ் படத்தை தயாரிக்க உள்ளாராம்.
பாலிவுட்டில் ஹிட்டான பதை ஹோ மற்றும் ஆர்டிகள் 15 படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளாராம். இந்த படங்களை தமிழில் தயாரிக்க உள்ளாராம்.
இதில் ஆர்டிகிள் 15 படத்தின் உரிமையை வாங்க முதலில் திட்டமிட்டது தனுஷின் ஒண்டர்பார் பட நிறுவனம்தானாம்.. ஆனால் அதற்குள் போனிகபூர் முந்திவிட்டாராம் இந்த கதை தீரன் போல ஒரு போலீஸ் புகாரை மையமாக கொண்டு நகரும் கதை இதற்கேற்ற நடிகர் மற்றும் இயக்குனரை தமிழில் தேடி வருகிறாராம் தயாரிப்பாளர் போனிகபூர்.