தளபதி விஜயின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! நடந்தது என்ன?
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவராவார். இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பல கோடிகளையும் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில், சென்னை போலீஸ் கட்டுப்பாடு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து, விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் என்றும் கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.
இதனையடுத்து, போலீசார் உடனடியாக, நீலாங்கரையில் உள்ள விஜயின் வீடு, சாலிகிராமம் அபுசாலி தெருவில் இருக்கும் மற்றோரு வீடு, வடபழனி அருணாசலா ரோட்டில் அவரது தாயார் சோபா பெயரில் இருக்கும் அவரது திருமண மண்டபம் ஆகிய மூன்று இடங்களிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதன் பின் இது வதந்தி என்று தெரியவந்தவுடன், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் போதையில் பேசியதும் தெரியவந்துள்ளது. பின் மிரட்டல் விடுத்த வாலிபரின் செல்போன் என்ணை வைத்து அவரை அடையாளம் கண்டுபிடித்து, போலீசார் அவரை விசாரணை செய்து வருகின்றனர். அவர் போரூர் ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த வாலிபர் என்பது குறிப்பிடத்தக்கது.