ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் விமான நிலையம் அருகில் குண்டு விபத்து ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள மக்கள் பலர் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருக்கும் தங்கள் நாட்டு மக்கள் மற்றும் அங்கிருந்து வெளியேற விரும்பக்கூடிய மக்களை மீட்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பயன்பாட்டில் உள்ள காபூல் விமான நிலையம் அருகே இன்று மாலை வெடிகுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அமெரிக்க பொது விவகாரங்களுக்கான உதவி பாதுகாப்பு செயலாளர் ஜான் கிர்பி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘காபூலில் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த குண்டு வெடிப்பால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…