ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தில் நேற்று நடந்த கார் குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 100 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆனால் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
கோர் மாகாணத்தில் (Ghor) உள்ள போலீஸ் தலைமையகம் மற்றும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த கார் வெடித்துள்ளது. இந்த சம்பவம் காலை 11 மணிக்கு நடந்தது என்று ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து வந்த காட்சிகள் இடிபாடுகளாகக் குறைக்கப்பட்டிருந்தன மற்றும் அப்பகுதியில் உள்ள பிற கட்டிடங்கள் ஓரளவு சேதமடைந்துள்ளன.
கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே சண்டை நடைபெற்றுவருகிறது. இதனால் அமெரிக்காவின் நேட்டோ படைகள் தலிபான்களை ஒழிக்க ஆப்கான் படைகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது.தொடர்ந்து போர் நடைபெற்று வருவதால் அதனை முடிவு கொண்டு வரும் விதமாக தலிபான்கள் மற்றும் அமெரிக்கா இடையே ஆப்கான் அரசின் உதவியோடு ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி மற்ற நாட்டு படையினரின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம். ஆனால், ஆப்கானிஸ்தான் அரசின் படையினர் மீதான தாக்குதல் தொடரும் என்று தலிபான்கள் தெரிவித்தனர். எனவே தலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தானின் அரசு படையினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது.
தலிபானுக்கும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு இடையே இந்த தாக்குதல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…
குஜராத் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…