பங்களாதேஷின் தலைநகரான டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்பட்ட குண்டுவெடிப்பில், 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பங்களாதேஷின் தலைநகரான டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்பட்ட குண்டுவெடிப்பில், வணிக கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில், 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இது குறித்து, டாக்கா பெருநகர காவல்துறை கமிஷினர் ஷபிகுல் இஸ்லாம் கூறுகையில், இந்த சம்பவத்தில், 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இந்த சம்பவம் நேற்று இரவு 7:30 மணியளவில் நடைபெற்றதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும், இந்த சம்பவத்திற்கான சரியான கரணம் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில், காயமடைந்தவர்களில் 29 பேர் டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 10 பேர் ஷேக் ஹசீனா தேசிய தீக்காயம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மற்ற காயமடைந்தவர்கள் மக்பஜார் பகுதியில் உள்ள பல மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்தில் அருகில் இருந்த கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதோடு, 2 பேருந்துகளும் சேதமடைந்துள்ளன.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…