லண்டன் விமான நிலையம் மூடல்!தேம்ஸ் நதிக்கரையில் வெடிகுண்டு எதிரொலி ……
தேம்ஸ் நதிக்கரையில் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அருகிலுள்ள லண்டன் விமான நிலையம் மூடப்பட்டது.
தேம்ஸ் நதிக்கரையில் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மர்ம பொருள் ஒன்று இருப்பதை கண்டு, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு வந்த போலீசார் மேற்கொண்ட சோதனையில், அது இரண்டாம் உலகப்போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு என்பது தெரியவந்தது. இதையடுத்து, அருகில் உள்ள லண்டன் விமான நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டதுடன், விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் 214 மீட்டர் சுற்றளவுக்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள போலீசார், பொதுமக்கள் அங்கு செல்ல தடை விதித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.