வயலில் நாற்று நடும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான்.!

ஊரடங்கில் சல்மான்கான் வயலில் இறங்கி நாற்று நடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் தான் சல்மான்கான்.இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘ராதே’. இந்த படத்தை பிரபுதேவா இயக்குகிறார். இந்த நிலையில் தற்போது ஊரடங்கு காரணமாக பலர் தங்களது நேரத்தை பல வகைகளில் கழித்து வருகின்றனர். சல்மான்கான் தனது ஊரடங்கு காலத்தை பன்வெல் பண்ணை வீட்டில் கழித்து வருகிறார். அதன் அருகிலுள்ள கிராமத்தில் குதிரைகளுடன் சவாரி செய்வதும், அங்கு விவசாயிகளுடன் இணைந்து பல வேலைகளை செய்தும் நேரத்தை செலவிட்டு வருகிறார். .
சமீபத்தில் கூட வயலில் இறங்கி டிராக்டரை ஓட்டும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வயலில் நாற்று நடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சல்மான்கான் காதலி என்று கிசுகிசுக்கப்படும் யூலியா மற்றும் ஒரு சிலருடன் இணைந்து வயலில் நெல் நடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் கூட அவரது காதலி என்று கிசுகிசுக்கப்படும் லூலியா அவர்களும் வயலில் நாற்று நடும் அனுபவத்தை வீடியோவாக பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025