பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விலகினாரா பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்.?

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து அமிதாப் பச்சன் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம், அமிதாப் பச்சன், சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, நடிகை கீர்த்தி சுரேஷ், நயன்தாரா,அனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ரஹ்மான், ஜெயராம் போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.
இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பானது கடந்தாண்டு தாய்லாந்தில் வைத்து தொடங்கப்பட்டது.அதன் பின் கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்ட படத்தின் படப்பிடிப்பை ஜனவரியில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து மீண்டும் தொடங்கப்பட்டது.அந்த படப்பிடிப்பில் கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ரஹ்மான், பார்த்திபன் உள்ளிட்ட ஒரு சில நடிகர், நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர் .ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் தற்போது நடந்து வரும் படப்பிடிப்பு மார்ச் 5-ம் தேதியோடு முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.மேலும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பினை ஏப்ரல் மாதம் முதல் ஜெய்ப்பூர் சுற்றியுள்ள பகுதிகளில் வைத்து தொடங்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஒப்பந்தமாகி இருந்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . திட்டமிட்ட தேதியில் படப்பிடிப்பு நடக்காததால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அமிதாப் பச்சன் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.