நவரச நாயகன் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் தி இவன் படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் நவரச நாயகன் கார்த்திக் மீண்டும் தி இவன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக நடித்து வருகிறார்.மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் இந்த படத்தை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கிய டி.எம் ஜெயமுருகன் இயக்கி வருகிறார்.மேலும் இந்த படத்திகற்கு ஜெயமுருகனே இசையமைத்து இருப்பதோடு படத்தின் கதை, திரைக்கதை,வசனம் பாடல்களையும் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.இந்த படத்தில் கார்த்திக்குடன் சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா, ஹேமந்த் மேனன், இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ள இந்த படமானது அண்ணன்-தங்கை பாசத்தை எடுத்துரைக்கும் வகையிலும் ,உயிரை விட மானமே பெரிது என்பதை உணர்த்தும் விதமாக உருவாகி வருவதாகவும், இந்த படத்திற்கான 70% படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் இயக்குனர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் இந்த படத்தில் ஒரு பைக் ஸ்டண்ட் காட்சி இடம் பெற்றுள்ளதாகவும்,அதற்கு டூப போடாமல் கார்த்திக் நடித்து காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் என்றும் கூறியிருந்தார்.
மேலும் இந்த படத்தில் வரும் ஒரு பாடலுக்கு பாலிவுட் நடிகை ஒருவர் நடனமாட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.இந்த நிலையில் தற்போது கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள தி இவன் படத்தில் வரும் ஒரு பாடலுக்கு பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடனமாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்காக மும்பையில் மாஸ் செட் ஒன்று போடப்பட்டுள்ளதாகவும் , அங்கு படமாக்கப்படும் பாடலுக்கு கார்த்திக்குடன் இணைந்து சன்னி லியோன் நடனமாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே தமிழில் சன்னி லியோன் வடகறி எனும் படத்தில் பாடல் ஒன்றிற்கு நடனமாடியதுடன் தற்போது வீரமாதேவி எனும் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…