ஊரங்கில் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு நூதன முறையில் கொரோனா நிவாரணம் கொடுத்த நடிகர் அமீர்கான்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களை வீடுகளிலேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அன்றாட உணவுக்கு தவித்து வருகின்றன. மேலும் பொருளாதாரத்தில் நாடு கடுமையான சரிவை சந்தித்துள்ளது.
பின்னர் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்க்க நிவாரணம் வழங்கவும் மத்திய மாநில அரசுகள் நிதி வழங்க விரும்புவார்கள் தாராளமாக வழங்கலாம் என்று கேட்டுக்கொண்டது. அதன்படி தொழில் துறை சார்ந்தவர்களும், விளையாட்டு மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் நிவாரணம் நிதி வழங்கி வருகின்றன. அதில் சிலர் நேரடியாக மக்களுக்கு தேவைப்படும் நிவாரண உதவிகளை செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் சல்மான்கான், ஷாருக்கான், அக்ஷய்குமார், கங்கனா ரணாவத், வித்யாபாலன் உளிட்ட பல இந்தி நடிகர், நடிகைகள் உதவி செய்து வருகிறார்கள். அவர்களை தொடர்ந்து நடிகர் அமீர்கான் நூதனமான முறையில் உதவி வழங்கி இருக்கிறார். அதாவது, ஏழை மக்களுக்கு தலா ஒரு கிலோ கோதுமை பாக்கெட்டுகள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதனை பலரும் குறைவாக மதிப்பிட்டு சிலர் வாங்க செலவில்லை. ஆனால் அதற்கும் வழியில்லாத ஏழைகள் மக்கள் கோதுமை பாக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர்.
வீட்டுக்கு சென்று குழந்தைகளுக்கு சப்பாத்தி போடுவதற்காக பாக்கெட்டை திறந்தவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அதாவது, கோதுமை பாக்கெட்டுக்கு உள்ளே ரூ.15 ஆயிரம் இருந்ததை பார்த்து அதிர்ச்சியிலும் ஒரு சந்தோசம் ஏழை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த கோதுமை பாக்கெட்டுக்குள் பணம் இருந்த விஷயம் அந்த பாக்கெட்டை வினியோகம் செய்த அவரது உதவியாளர்களுக்கு கூட தெரியாது என்று கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அமீர்கான் தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…