பாலிவுட் நடிகையின் சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத்துறை நடவடிக்கை!

பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் ரூ.7.12 கோடி மதிப்புடைய சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மோசடி செய்த பணத்தில் சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலினுக்கு பரிசு பொருட்கள் கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து, அமலாக்கத்துறை நடவடிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அண்மையில் வெளிநாடு செல்லவிருந்த நடிகை ஜாக்குலின் தடுத்து நிறுத்தப்பட்டு, அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
ஏற்கனவே நடிகை ஜாக்குலினிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தியிருந்தனர். அப்போது, சுகேஷ் சந்திரசேகரை தனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் என்று கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி உரிமையாளர் மற்றும் அரசியல் தலைவர்களை தனக்கு தெரியும் உள்ளிட்ட பல்வேறு பொய்களை நடிகை ஜாக்குலினிடம், சுகேஷ் தெரிவித்ததாக கூறப்படுகிறது. நடிகையின் உறவினர்கள் வங்கி கணக்கில் கோடி கணக்கில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் விலை உயர்ந்த பரிசு பொருட்கள் ஜாக்குலினுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.
மேலும் இவர்கள் இருவரும் இருக்கக்கூடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களின் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இதற்கிடையே, வங்கி பணப்பரிமாற்றம் கண்டறியப்பட்டதால், இதனடிப்படையில் ஜாக்குலின் சொத்துக்களை அமலாக்கத்துறை தற்போது முடக்கி, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025