புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர்.!
பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் தற்போது நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் தற்போது கே. ஜி. எஃப் 2 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு திடீரென நெஞ்சு வலியால் அவதிப்பட்டு மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு ஆக்ஸிஜன் இல்லாமையால் தான் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதனையடுத்து அவருக்கு செய்த கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியது குறிப்பிடத்தக்கது . அதனையடுத்து மருத்துவ கண்காணிப்பில் இருந்த சஞ்சய் தத் அடுத்த இரு தினங்களில் வீடு திரும்பினார். இந்த நிலையில் தற்போது இவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மூன்றாவது நிலையில் இருக்கும் இந்த புற்றுநோயை எதிர்த்து போராடுவதற்காக சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு செல்ல இருக்கிறாராம்.
இது குறித்து ட்வீட் செய்த பஞ்சாப் மந்திரியான ராணா குர்மித், என் நண்பருக்கு நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை அறிந்து மனம் உடைந்ததாகவும், இதனை வெல்ல அவருக்கு வலிமை இருப்பது தனக்கு தெரியும் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் கிரிக்கெட் வீரரும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவருமான யுவராஜ் சிங் கூறுகையில், இது ஏற்படுத்தும் வலி தனக்கு தெரியும் என்றும், ஆனால் நீங்கள் மிகவும் வலிமையானவர் என்பதையும் நான் அறிவேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் அவர் விரைவில் மீண்டு வர பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார்.
???????? pic.twitter.com/tinDb6BxcL
— Sanjay Dutt (@duttsanjay) August 11, 2020
You are, have and always will be a fighter @duttsanjay. I know the pain it causes but I also know you are strong and will see this tough phase through. My prayers and best wishes for your speedy recovery.
— Yuvraj Singh (@YUVSTRONG12) August 11, 2020