வறுமையில் வாடும் 1500 சினிமா கலைஞர்களுக்கு பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார் நிதியுதவி வழங்கி உதவியுள்ளார்.
கொரோனா தொற்றால் உலக நாடுகள் பல்வேறு வகையில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டதன் மூலம் திரைப்படதுறை ஊழியர்களின் வாழ்வும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர்.
இந்த நிலையில் பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார் படப்பிடிப்புகள் இல்லாமல் வறுமையில் வாடும் 1500 சினிமா கலைஞர்களின் வங்கி கணக்கில் ரூ. 3,000 வீதம் 48 லட்சம் வரை செலுத்தி உதவியுள்ளார். இவர் ஏற்கனவே மும்பை காவல்துறை அறக்கட்டளைக்கு ரூ. 2கோடி நிதியுதவியும், மும்பை மாநகராட்சிக்கு ரூ. 3 கோடியும் வழங்கி உதவியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பலருக்கு உதவி செய்து வரும் அக்ஷய் குமார் அவர்களை பலர் பாராட்டி வருகின்றனர். இவர் தற்போது ராகவா லாரன்ஸின் காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கான லெக்ஷ்மி பாம் படத்தில் நடித்து வருகிறார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…