பாலிவுட் நடிகரும், போனி கபூரின் மகனுமான அர்ஜுன் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி.!

Default Image

பாலிவுட் நடிகரும், போனி கபூரின் மகனுமான அர்ஜுன் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். சிலர் உயிரிழந்தும் உள்ளனர். அந்த வகையில் பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பிரபல திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூரின் மகனும், பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகருமான அர்ஜுன் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் பகிர்ந்த பதிவில் கூறியதாவது, எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக உங்கள் அனைவருக்கும் அறிவிப்பது எனது கடமை. நான் நன்றாக இருக்கிறேன். எந்த அறிகுறியும் இல்லை. மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனையின் படி நான் என்னை வீட்டில் தனிமைப்படுத்தியுள்ளேன்.உங்கள் ஆதரவுக்கு நான் முன்கூட்டியே நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வரும் நாட்களில் எனது உடல்நலம் குறித்த தகவல்களை உங்களுக்கு கூறுகிறேன். இவை அசாதாரணமான மற்றும் கணிக்க இயலாத நாட்கள், மனிதகுலம் அனைத்தும் இந்த வைரஸை வெல்லும் என்று நான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

????????

A post shared by Arjun Kapoor (@arjunkapoor) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்