அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரானிய தளபதியின் உடல் இறுதி ஊர்வலம்!

Default Image
  • அமெரிக்காவின் தாக்குதலால் கொல்லப்பட்ட ஈரானிய தளபதி உடல் இறுதி ஊர்வலம் சென்றுள்ளது.இந்த ஊர்வலத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துள்ளனர்.
  • ஈரானிய தளபதியின் உடல் அவரது சொந்த ஊரான கெர்மனில் அடக்கம் செய்யப்படும் என்று ஈரானிய தூதர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் தூதரகத்தை ஈரான் படை வீரர்கள் தாக்கியதன் காரணமாக டொனால்ட் டிரம்ப் ,ஈரான் இதற்கு மிகப்பெரிய விலை கொடுக்கவேண்டியிருக்கும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் அமெரிக்க படைகள் தயாராக இருக்குமாறு உத்தரவு விடப்பட்டிருந்தது.

இதன் காரணமாக அமெரிக்க படைகள் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் நடத்திய தாக்குதலில் ஈரானின் தளபதி ஜெனரல் சுலைமானி மற்றும் அபு மஹ்தி அல் முஹாண்டிஸ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கொல்லப்பட்ட இருவரின் இறுதி ஊர்வலம் ஈராக்கிய நகரமான காஸ்மெனியில் சனிக்கிழமை காலை தொடங்கியது.இந்த இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் ஈராக்கிற்கான ஈரானிய தூதர் மஸ்ஜெடி கூறுகையில் தியாகிகளின் துக்க அனுசரிப்பை நடத்த காஸ்மெயினில் உள்ள ஷியா இமாம்களின் புனித ஆலயங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் அவர் இறுதி ஊர்வலத்திற்கு பின்னர் ஈராக் தலைநகரான பாக்தாதிற்கு சடலங்கள் கொண்டு செல்லப்படும் என்றும் தளபதி சுலைமானியின் உடல் திங்களன்று ஈரானுக்கு கொண்டுசெல்லப்பட்டு அவரது சொந்த ஊரான கெர்மனில் அடக்கம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்