விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட மியான்மர் கவிஞர் – உறுப்புகள் அகற்றப்பட்ட நிலையில் திரும்பிய உடல்!

Default Image

தடுப்புக்காவலில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட மியான்மர் கவிஞர் கெத் தி அவர்களின் உடல், உறுப்புகள் அகற்றப்பட்ட நிலையில் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது.

மியான்மரில் ஜனநாயக ரீதியான ஆட்சி கலைக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இரவோடு இரவாக ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. இதனையடுத்து மியான்மரில் ராணுவத்தினரின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக மியான்மரில் உள்ள கெத் தி எனும் கவிஞர் அவர்கள் “தலையில் சுடுகிறார்கள், ஆனால் புரட்சி இதயத்தில் இருக்கிறது” என அதிகம் பேசப்பட்ட கவிதையை இயற்றிய கவிஞர் அவர்கள் ஆளும் ராணுவ ஆட்சிக்கு எதிரானவராக இருந்துள்ளார்.

இந்நிலையில், கவிஞர் கெத் தி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் விசாரிப்பதற்காக மியான்மரில் உள்ள ஆயுதமேந்திய இரு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் வந்து அழைத்து சென்றுள்ளனர். அதன் பின்பதாக கவிஞர் உள்ளுறுப்புகள் அகற்றப்பட்ட நிலையில் சடலமாக அனுப்பப்பட்டுள்ளார். இது குறித்து கவிஞரின் மனைவி கூறுகையில், சனிக்கிழமை இரவு எனது நாங்கள் இருவருமே விசாரணை க்காக அழைக்கப்பட்டோம். நான் விசாரிக்கப்பட்ட பொழுது எனது கணவரும் இருந்ததார். பின் அவர் விசாரணை மையத்தில் இருப்பதாக என்னிடம் கூறினார்கள், நான் வெளியில் அனுப்பப்பட்டேன்.

ஆனால், எனது கணவர் திரும்பி வரவில்லை. மாறாக அவரை ஒரு மருத்துவமனையில் சென்று பார்க்குமாறு அவர்கள் சொன்னார்கள். நான் அவருக்கு ஒரு கை அல்லது கால் ஏதேனும் சேதம் அடைந்த நிலையில் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் நான் வந்து பார்க்கும் பொழுது அவர் சவக்கிடங்கில் இருந்தார். அவரது உள் உறுப்புகளும் அகற்றப்பட்டு இருந்தது என மிக வருத்தத்துடன் கூறியுள்ளார். மேலும் தனது கணவரை இராணுவத்தினரே அடக்கம் செய்ய திட்டமிட்டதாகவும், எனது கணவரின் உடலையாவது என்னிடம் தாருங்கள் என எனது கணவரின் உடலுக்காக நான் கெஞ்சினேன் எனவும் கூறியுள்ளார். அதன்பின் பதாக தான் எனக்கு தெரிந்தது எனது கணவர் விசாரணை மையத்தில் சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளார் என்பது என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்