Israel Hamas War [File Image]
கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது போர் தொடுத்தனர் . ஹமாஸ் அமைப்பினர் நடத்திய முதற்கட்ட தாக்குதலில் இஸ்ரேலில் சுமார் 1,400 பேர் உயிரிழந்தனர் என கூறப்பட்டது. அதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் பதில் தாக்குதலில் இதுவரை 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நாகரில் இஸ்ரேல் ராணுவத்தினர் தற்போது வரை தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என இரு தரப்பினரும் பிணை கைதிகளாக நூற்றுக்கணக்கானோரை பிடித்து வைத்துள்ளனர். அவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானர்களை விடுவிக்க சமீபத்தில், இரு தரப்பில் இருந்தும் ஒரு வாரம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், நேற்று காசாவின் மத்திய பகுதியில் உள்ள மாகாசி அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 70 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் துயரத்துடன் தெரிவித்துள்ளார். மேலும், தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் என்ற இடத்தில் இஸ்ரேல் நடத்திய தனி விமானத் தாக்குதலில் மேலும் 8 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், வடக்கு காசாவில் உள்ள ஹமாஸின் நிலத்தடி சுரங்கப் பாதையில், போர் தொடங்கிய நாளன்று சிறைபிடிக்கப்பட்ட ஐந்து இஸ்ரேலிய பணயக்கைதிகளின் இறந்த உடல்கள் மீட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு தொடங்கிய இஸ்ரேலிய தாக்குதல்கள் கிறிஸ்துமஸ் தினமான இன்று காலை வரை தொடர்ந்தது.
சிரியாவில் குர்திஷ் போராளிகள் மீது துருக்கி நடத்திய தாக்குதல்.!
இதுவரை காசா நகரில் பொதுமக்கள் , ஹமாஸ் அமைப்பினர் என 20,057 பேர் உயிரிழந்தனர் என்றும் அதில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் 53,320 பேர் போரில் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…