‘அதிவேக டேட்டாவுடன்’ அறிமுகமாகிய அசத்தலான BMW iNext எஸ்யூவி சொகுசு கார்.! விரைவில் விற்பனை..

Default Image
  • BMW நிறுவனம் தொலைநோக்கு சிந்தனையுடன் 5ஜி தொழில்நுட்பத்திலான iNext எஸ்யூவி சொகுசு காரை அறிமுகம் செய்யவுள்ளது.
  • 2021-ம் ஆண்டு முதல் இந்த சொகுசு கார் விற்பனைக்கு வரவுள்ளது. இதில் இன்பில்ட் 5ஜி சிம் கார்டு உடன் இந்தக் கார் பயன்பாட்டுக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

BMW நிறுவனம் ஆட்டோமொபைல் துறையில் புது புது அதிநவீன ரக கார்களை சந்தையில் இறக்கி தனது மார்க்கெட் லெவலை உயர்த்தி வருகிறது. அதுமட்டுமில்லாமல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது BMW நிறுவனம் தொலைநோக்கு சிந்தனையுடன் 5ஜி தொழில்நுட்பத்திலான iNext எஸ்யூவி சொகுசு காரை அறிமுகம் செய்யவுள்ளது.

இதனிடையே இன்னும் ஸ்மார்ட் போன்களே 5ஜி தொழில்நுட்பத்தை ஏற்காத சூழலில் எஸ்யூவி ரக கார் ஒன்றை 5ஜி தொழில்நுட்பத்தில் BMW அறிமுகம் செய்கிறது என எதிர்பார்ப்பை உண்டாகிறது. உங்களது ஸ்மார்ட்போன் 5ஜி இல்லையென்றாலும் இந்தக் காரின் 5ஜி தொழில்நுட்பம் பயனாளருக்கு கூடுதல் பயன்களைத் தரும் வகையிலேயே தான் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், CES 2020 கார்கள் கண்காட்சியில் இந்தக் கார் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது. பின்னர் எலெக்ட்ரிக் காரான BMW iNext உற்பத்தி இந்த ஆண்டு முதல் முழுவீச்சில் நடைபெற உள்ளது.

பின்னர் வருகின்ற 2021-ம் ஆண்டு முதல் இந்த சொகுசு கார் விற்பனைக்கு வரவுள்ளது. இதில் இன்பில்ட் 5ஜி சிம் கார்டு உடன் இந்தக் கார் பயன்பாட்டுக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்