BMW கார் மற்றும் விலை உயர்ந்த வீட்டை காதலனுக்கு பரிசளித்து ஷாக் கொடுத்த காதலி.!

Default Image
  • சீனாவில் காதலனை சந்தோசப்படுத்த, BMW கார் மற்றும் அழகிய வீடு ஒன்றை காதலி பரிசளித்தது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
  • காதலித்து ஓராண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, தன் காதலனுக்கு விலை உயர்ந்த பரிசை அளிக்க திட்டமிட்டுள்ள சீன பெண்.

காதலன் காதலி மீது, காதலி காதலன் மீது அன்பை வெளிப்படுத்த, காதலர்கள் அவ்வப்போது பரிசுப் பொருட்களை பகிர்ந்துகொள்வர்கள். அதில், குறிப்பிட்ட சில புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி,பார்ப்பவரின் மனதை அதிர்ச்சியாக்கும். இந்நிலையில், தற்போது சீனப்பெண் ஒருவர் தன் காதலனுக்கு சர்ப்ரைஸாக கொடுக்கும் விதமாக வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பலரால் பகிரப்பட்டுவருகிறது.

இந்நிலையில், காதலித்து ஓராண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, தன் காதலனுக்கு விலை உயர்ந்த பரிசை அளிக்க திட்டமிட்டுள்ளார். சீனாவை சேர்ந்த இளம்பெண் ஜியோக்கி என்பவர் அவரது நண்பர்கள் மற்றும் பெற்றோர் உதவியுடன் BMW கார் மற்றும் அழகிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அதனை காதலனிடம் கொடுப்பதற்காக அங்குள்ள MALL-யை தேர்வு செய்த அந்த பெண், அங்கு தனது காதலனை வரச் சொல்லியுள்ளார். பின்னர் அங்கு வந்த காதலனுக்கு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. காதலி காதலனை,  மலர்க் கொத்துக்களால் வரவேற்று , பின்பு திடீரென BMW காரின் சாவியை அதில் வைத்து அவரிடம் வழங்கியுள்ளார்.

பின்னர் அதை பார்த்து மகிழ்ச்சியில் ஆழ்ந்த காதலனுக்கு மற்றொரு ஆச்சரியம் காத்திருந்தது. பின்பு சிறிது நேரம் கழித்து, புதிய வீட்டின் சாவியையும் கொடுத்துள்ளார். அதனைப் பெற்றுக்கொண்ட காதலன் உணர்ச்சிப்பெருக்கில் காதலிக்கு நன்றி தெரிவித்தார். ஆண்கள் தங்களது காதலிக்கு விலையுயர்ந்த பரிசுப்பொருட்களை கொடுத்துவரும் நிலையில், காதலி ஒருவர் இதுபோன்று செய்தது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு வந்த மக்களும் அச்சிரியத்தில் பார்த்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்