கண்பார்வை மங்குதலை போக்கும் ஒரு அருமையான வீட்டு மருத்துவம்….!!
மனிதனின் முக்கிய உறுப்புக்களில் கண் முதன்மை வாய்ந்தது .மேலும் இது ஐம்புலன்களில் முக்கியமான ஒன்றாகும் .நாம் பார்கின்ற காட்சிகளையெல்லாம் அழகான புகைப்படமாக்கி அடித்த வினாடியே மூளைக்கு அனுப்பப்பட்டு விழி தரையில் பிம்பமாக காட்சி அளிக்கும் ஒரு அற்புதமான உறுப்பு கண் ஆகும் .கண் இல்லை என்றால் உலகமே இருட்டாகத் தான் இருக்கும்.பப்பாளி ,கேரட் ,கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.கண்ணை பாதுகாக்க ஒரு எளிய வீட்டு மருத்துவத்தை இப்போது பார்ப்போம் .
தேவையான பொருட்கள் :
பொன்னாங்கண்ணி கீரை -50 மி லி
கீழா நெல்லி – 50மி லி
அதிமதுரம் -5 கி
நல்லெண்ணெய் -100 மி
செய்முறை :
தேவையான அளவு கீழா நெல்லி இலைகளை எடுத்து அரைத்து வைத்து கொள்ள வேண்டும் .பின்பு சிறிதளவு பொன்னாங்கண்ணி கீரை சாற்றை அரைத்து வைத்து கொள்ள வேண்டும் .ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நல்லஎண்ணெய்யை ஊற்ற வேண்டும்.அதன் பின்பு கீழ நெல்லி இலை சாறு ,பொன்னாங்கண்ணி இலைசாறு ,அதிமதுரம் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும் .இந்த தைலம் நன்கு கொதித்தவுடன் இறக்கி வடிகட்டி குளிர வைத்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து பயன்படுத்தலாம் .இதனை வாரம் 3 முறை பயன் படுத்த வேண்டும் .
பயன்கள் :
கீழா நெல்லி கண்ணை பாதுகாப்பதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது .மேலும் இது மஞ்சள் காமாலை, காச நோய் ,பித்தம் ,கண்எரிச்சல் ,கல்லிரலில் தொற்று நோய் வராமல் தடுக்கும் .அடுத்ததாக பொன்னாங்கண்ணி இது கண் கூசுதல்,கண் எரிச்சல் ,பார்வை மங்குதல்,முடிவளர்ச்சியை தூண்டும், முதலியவைகளை சரிசெய்யும் குணம் வாய்ந்தது .உடலுக்கு குளிர்ச்சியை தரும்.அதிமதுரம் பித்தத்தை சரி செய்யும். .நல்லெண்ணெய் கபாலச்சூடு,கண் எரிச்சல் ,கண் மங்குதல் முதலியவைகளை சரி செய்யும்.